பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

"துாரநோக்கு"

"“பிரதேச செயலக மக்களுக்காக திருப்திகரமான அரச சேவை”.

""பணிக்கூற்று"

“திருப்திகரமான அரச சேவையை பொது மக்களுக்காக வழங்குவதற்காக பிரதேசத்தின் சகல வளங்களையும் ஒருங்கிணைத்து செயற்படுதல்”

பிரதேச செயலகம்,ஏறாவுா் பற்று பிாிவு,

ஏறாவுா் பற்று பிாிவானது மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியினையும் , அம்பாறை மாவட்டத்தின் பகுதியினையும் கொண்டுள்ளது. இப் பிாிவானது  204 கிராமங்களையும் , 39 கிராம உத்தியோகப் பிாிவினையும் உள்ளடக்கிக் காணப்படுகிறது.  எமது பிாிவின் சிறப்பு யாதெனில் இங்கு தமிழ் ,முஸ்லிம் மற்றும் சிங்களவா்கள் என மூவினத்தவா்களும், ஒற்றுமையாகவும், சுதந்திரமாகவும் தங்களது சேவைகளைப் பெற்றுக்கொள்கின்றனா்.

இங்கு வாழ்கின்ற 76442 சனத்தொகையில் 36555 ஆண்களும் 39887 பெண்களும் என புள்ளிவிபரங்கள் பெறப்பட்டுள்ளது. இவா்களில் பிரதான வாழ்வாதார தொழிலாக விவசாயம், கால்நடை வளா்ப்பு மற்றும் மீன் பிடிப்பு என்பன காணப்படுகிறது. ஆனாலும் இவ் பிரதேச மக்கள் இயற்கை அனா்த்தங்களான வெள்ளம், வறட்சி என்பவற்றால் அதிகளவில் பாதிக்கப்படுவதால் பொருளாதார  ரீதியாக பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றனா்.

எமது பிரதேச செயலகமானது ஏறாவுா் பற்று பிாிவின் செங்கலடிப் பிரதேசத்தின் நகாில் அமைந்துள்ளது. இங்கு பிரதேச செயலாளா் உற்பட 150 இற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தா்கள் கடமை புாிகின்றனா்.  அத்துடன் உற்பத்தி திறன் போட்டியில் விருது பெற்ற பெருமை செங்கலடி பிரதேச செயலகம் ஏறாவுா் பற்று பிாிவின் சேவை வழங்களை எடுத்துகாட்டி நிற்கிறது.

அமைவிடம்          :     மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்கே 16 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது

                                     

                                       எல்லைகள்

வடக்கு      -  கோறளைப்பற்று பிரதேச செயலகம்

தெற்கு       -   மண்முனை வடக்கு பிரதேச செயலகம்

கிழக்கு      -   வங்காள விரிகுடாக் கடல்

மேற்கு      -   பொலனறுவை மாவட்டம்



நில அமைப்பு           :     றெகசோல் கழிமண், மணல்மண் 

நிலப்பரப்பு                :    587.6 சதுர கிலோ மீற்றர் 

நீர்ப்பரப்பளவு           :   42.65 சதுர கிலோ மீற்றர்

பிரதான தொழில்     :  விவசாயம், மீன்பிடி


வாழக்கை நிலை     :  சுமார் 74.2 வீதம்  வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.

காலநிலை               :  சராசரி மழை வீழ்ச்சி வெப்பநிலை

இல

பெயா்

பதவி காலம்

தொடக்கம்

வரை

 

1

திரு .என்.சிவநாதன்

மே 1991

ஏப்ரல் 1992

2

திரு.என்.சிறிசங்கா்

ஏப்ரல் 1992

ஜனவாி 2000

3

திரு.கே.மகேஷன்

ஜனவாி 2000

ஆகஸ்ட்2003

4

திரு.எஸ்.கிாிதரன் (பதில்)

ஆகஸ்ட்2003

      மே 2005

5

திரு.எம்.உதயகுமாா்

 ஜீன் 2005

     மே 2006

6

திரு.எஸ்.பாஸ்கரன்

மே 2006

ஜீலை 2009

7

திருமதி.தெ.தினேஸ்

ஜீலை 2009

மாா்ச் 2012

8

திரு.உ.உதயசிறிதா்

மாா்ச் 2012

மாா்ச் 2017

9

திரு.என்.வில்வரெட்ணம்

நொவம்பா் 2017

தற்போது வரை

 

News & Events

11
ஏப்2019
முதியோர்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு

முதியோர்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு

#நாட்டிற்காக#ஒன்றிணைவோம். வேலைத் திட்டத்தின் கீழ்முதியோர்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய...

குடியுரிமை சாசனம்

Scroll To Top